|
|
|
|
|
|
பழமொழிகளும் அவற்றிற்கு பொருத்தமான கருத்துக்களும்
|
|
01) அகத்தின் அழகு முகத்தில் தெரியும் -
|
மனவெளிப்பாடு
|
|
02) ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு -
|
கோபம் சிந்தனைக்கு இடையூறு
|
|
03) இளமையிற் கல்வி சிலையில் எழுத்து -
|
இளவயதுக் கல்வி நிலைத்திருக்கும்
|
|
04) ஒன்று பட்டால் உண்டு வாழ்வு -
|
ஒற்றுமை உயர்வு தரும்
|
|
05) கந்தையானாலும் கசக்கிக் கட்டு -
|
வறுமையிலும் செம்மையாக வாழ்
|
|
06) கூடி வாழ்ந்தால் கோடி நன்மை -
|
உறவுகளை சேர்ந்திருப்பது நன்மை தரும்
|
|
07) மின்னுவதெல்லாம் பொன்னல்ல -
|
கவர்ச்சியானவையெல்லாம் நல்லவையல்ல
|
|
08) பொறுத்தார் பூமியாழ்வார் -
|
பொறுமை வெற்றி தரும்
|
|
09) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் -
|
நோய் இன்றி வாழ்வதே பெரிய செல்வம்
|
|
10) இட்டுக் கெட்டார் எங்கும் இல்லை -
|
தருமம் செய்
|
|
|
|
|
|
|
|
|
|
தரம்-4 தமிழ்
|
|
|
பழமொழிகளும் அவற்றிற்கு பொருத்தமான கருத்துக்களும்
|
|
01) அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு -
|
ஒற்றுமையே பலம்
|
|
02) அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் -.
|
விடாமுயற்சியாற் பயன் உணடு
அளவோடு
செய்தல் வேண்டும்
|
|
03) ஆற்றிலே போட்டாலும் அளவறிந்து போடு -
|
எதையும் அளவோடு செய்தல் வேண்டும்.
|
|
04) உப்பிட்டவரை உள்ளளவும் நினை -
|
நன்றி மறத்தல் கூடாது
|
|
05) ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? -
|
இளமையிற் செய்
|
|
06) ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் -
|
ஓர் உதாரணமே போதும்
|
|
07) கடுகு சிறிதானாலும் காரம் பெரிது -
|
சிறியதன் வலிமை
|
|
08) காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு -
|
எந்தத் தாய்க்கும் தனது பிள்ளை மேலானவர்
|
|
09) காற்றுள்ள போதே தூற்றிக்கொள்; -
|
சந்தர்பத்தை தவற விடக்கூடாது
|
|
10) குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். -
|
குற்ற உணர்ச்சியினால் மனதால் துன்புறுவர்.
|
|
11) சிறுதுளி பெருவெள்ளம் -
|
சேமிப்பின் மகிமை
|
|
12) சூடுகண்ட பூனை அடுப்பங்கரையை
நாடாது. -
|
அனுபவம் ஆபத்தில் இருந்து பாதுகாக்கும்
|
|
13.அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது -
|
இன்றியமையாதது
|
|
14) அலைமோதும் போதே தலைமுழுகு -
|
சந்தர்பத்தை தவற விடக்கூடாது
|
|
15) ஆறின கஞ்சி பழங்கஞ்சி -
|
காலத்தின் மகிமை
|
|
16) போதுமென்ற மனமே பொன் செய்யும்
மருந்து -
|
மனநிறைவே சிறந்த செல்வம்
|
|
17) முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் -
|
தீமை செய்தால் தீமை வரும்
|
|
18) விளையும் பயிரை முளையிலே தெரியும் -
|
இளமையில் எதிர்காலம் புலப்படும்.
|
|
|
|
|
|
|
தரம் -5 தமிழ்
|
|
|
பழமொழிகளும் அவற்றிற்கு பொருத்தமான கருத்துக்களும்
|
|
01) ஏட்டுச்சுரைக்காய்
கறிக்கு உதவுமா? -
|
அனுபவமற்ற கல்வி
|
|
02) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
-
|
அதிக ஆசை அழிவைத் தரும்.
|
|
03) கடனில்லாத கஞ்சி
கால்வயிறு போதும் -
|
மானத்துடன் வாழ வேண்டும்
|
|
04) அழுத பிள்ளை பால் குடிக்கும்
-
|
முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்.
|
|
05) தொட்டிற் பழக்கம்
சுடுகாடு மட்டும் -
|
சிறுவயதுப் பழக்கம் நீங்காது
|
|
06) சுவர் இருந்தால்தான் சித்திரம்
வரையலாம் -
|
உடல் வலிமை அவசியம்
|
|
07) முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும் -
|
தீமை செய்தால் தீமை வரும்
|
|
08) வல்லவனுக்குப்
புல்லும் ஆயுதம் -
|
திறமையில் நம்பிக்கை
|
|
09) பேராசை பெரு நட்டம்
-
|
எல்லை கடந்த ஆசை துன்பம் தரும்
|
|
10) பதறாத காரியம் சிதறாது -
|
அமைதியின் வெற்றி
|
|
11) ஆனைக்கும் அடி சறுக்கும்
-
|
பெரியவர்களும் தவறு விடலாம்
|
|
12) நிறைகுடம் தளம்பாது
-
|
படித்தவர் அதிகம் பேசமாட்டார்
|
|
13) அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு -
|
ஒற்றுமையே பலம்
|
|
14) மனமுண்டானால்
இடமுண்டு -
|
எதையும் விருப்போடு செய்வதன் அவசியம்
|
|
15) இளங்கன்று பயமறியாது -
|
வாலிபத் துணிவு
|
|
16) இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை-
|
திருப்தியற்ற மனம்
|
|
17) பழகப் பழக பாலும் புளிக்கும் -
|
மதிப்புக்குறைதல்
|
|
18) தவளையும் தன் வாயாற் கெடும் -
|
நாவடக்கத்தின் அவசியம்
|
|
19) போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து -
|
திருப்தியான மனமே சிறந்த செல்வம்.
|
|
20) சிறு துரும்பும் பல்லுக் குத்த உதவும் -
|
சிறு பொருளையும் பாதுகாத்தல் வேண்டும்
|
|
21) குற்றம் பார்க்கிற் சுற்றம் இல்லை -
|
தவறுகளை பொறுத்தால் உறவுகள ; வளரும்
|
|
22) நிழலின் அருமை வெயிலில் தெரியும்-
|
ஒன்றின் அருமை அது இல்லாதபோது தெரியும்
|
|
23) அன்பான சிநேகிதனை ஆபத்தில்
அறியலாம் -
|
உத்தம நட்பு
|
|
24) உண்ணாச் சொத்து மண்ணாய் போகும் -
|
உலோபம் கூடாது
|
|
25) உப்பில்லாப் பண்டம் குப்பையிலே -
|
முக்கியத்துவத்தின் உயர்வு
|
|
26) ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் -
|
ஓர் உதாரணமே போதும்
|
|
27) குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி
மங்காது -
|
நற்புகழ் என்றும் மங்குவதில்லை
|
|
28) சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும்
நாப்பழக்கம் -
|
தொடர்பயிற்சி வெற்றி தரும்
|
|
28) ஆழமறியாது காலை விடாதே -
|
எதையும் ஆராய்ந்து செய்தல் வேண்டும்
|
0 Comments